டிசம்பர் 18-19ல் பெங்களூரில் "வெப் இன்னோவேசன் 2007" கருத்தரங்கம்




டிசம்பர் 18-19ல் "வெப் இன்னோவேசன் 2007" (web innovation 2007)என்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பெங்களூரில் நடைபெற்றது. மைசூரிலிருந்து நானும், நண்பர் கார்த்தியும் சென்றோம். 750க்கும் மேற்பட்ட மென்பொருள் வல்லுனர்கள் இதில் பங்குபெற்றனர். இக்கருத்தரங்கில் வெப் 2.0 (web2.0) என்பது மையக்கருவாக அமைந்திருந்தது. அடோபி(Adobe) மற்றும் மைக்ரோசாப்ட்(Microsoft) ஆகிய நிறுவனங்களின் புதிய மென்பொருட்களின் வெள்ளோட்ட வெளியீடுகளை டிவிடி மற்றும் குறுவட்டாக அளித்தனர். அவை பற்றிய விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

Labels:

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கிற்கு முனைவர் மு.இளங்கோவன் அழைப்பு விடுத்திருந்தார். தமிழா முகுந்தராஜும் பங்கேற்க அழைத்தார். அங்கு பேசவிருக்கும் விஷயங்கள் எனக்குத் தெரிந்தவையானாலும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆசை தான். இம்மாதத்தில் இரு நிகழ்வுகள்:
  1. டிசம்பர் 9ல் புதுவையில் வலைப்பதிவர் பயிலரங்கு.
  2. டிசம்பர் 18-19ல் "வெப் இன்னோவேசன் 2007" என்ற கருத்தரங்கம் பெங்களூரில்.
நண்பர்கள் நால்வரில் இருவர் ஒரு நிகழ்வுக்கும் மற்ற இருவர் மற்றொரு நிகழ்வுக்குச் செல்வதெனவும் முடிவுசெய்யப்பட்டது.
இதில் நானும் நண்பர் கார்த்தியும் பெங்களூர் வெப் இன்னோவேசன் 2007 -ல் பங்கேற்க முடிவுசெய்ததால் புதுவை பயணத்திட்டம் கைவிடப்பட்டது. மாற்றாக எனது நண்பர்கள் சுவாமிநாதனையும் அகிலனையும் எங்கள் இயக்குனரின் ஒப்புதலைப் பெற்று அனுப்பி வைத்துவிட்டு நான் இங்கிருந்தே அவ்வப்போது நிகழ்வுகள் குறித்து அறிந்து வந்தேன். பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.சுகுமாரன் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருப்பதாக நண்பர் சுவாமிநாதன் கூறினார். மயிலாடுதுறை நண்பர் மணிவண்ணனும் இப்பட்டறையில் பங்கேற்றார். தமிழ்வெளியில் படங்களை உடனுக்குடன் ஓசை செல்லா வெளியிட்டார்.

நல்ல வலைப்பதிவுகள் தமிழில் பெருகிட இது போன்ற நிகழ்வுகள் உறுதுணையாக இருக்குமென்பதில் ஐயமில்லை. இந்த வலைப்பதிவர் பயிலரங்கை நடத்த முயற்சி மேற்கொண்டு செம்மையாக நடத்தும் அனைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

----------------
Now playing: Amma - New
via FoxyTunes

Labels: