மைசூரில் அழகிய தமிழ் மகன்...

மைசூரில் அழகிய தமிழ் மகன்...

சென்ற ஞாயிறன்று(நேற்று) அழகிய தமிழ் மகன் திரைப்படத்தைக் காண மதியம் 4.30 மணிக்காட்சிக்கு ஓபரா திரையரங்கிற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். படம் சுமார் ரகம் என்றறிந்த போதிலும் மைசூரில் தமிழ்ப் படங்களைக் காணும்பொழுது ஒருவித மகிழ்ச்சி ஏற்படுவதால் சென்றேன். முன்னதாகச் சென்றதால் பால்கனிக்கான நுழைவுச்சீட்டு எளிதாகக் கிடைத்தது.

தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் இப்படத்தைக் காண அதிகளவில் வந்திருந்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இங்கு நடிகர் விஜய் ரசிகர்கள் அதிகமாம்.
இங்குள்ளவர்கள் தமிழ்த்திரைப்படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
வழக்கமான இரட்டைவேட கதை தான்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே பாடலில் விஜய்யின் ஆடல் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது.
விஜய்யின் ஆடல், ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன
மற்றபடி குறிப்பிடும்படியாக ஏதுமில்லை.


----------------
Now playing: Benny Dayal, Ujjayinee - Nee Marilyn Monroe
via FoxyTunes

Labels:

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< முகப்பு