செவ்வாய், நவம்பர் 20, 2007
டாட்நெட் 3.5 வெளியிடப்பட்டது!
டாட்நெட் ஃப்ரேம்ஒர்க் 3.5

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட டாட்நெட் ஃப்ரேம்ஒர்க் 3.5 பதிப்பின் இறுதி வெளியீட்டை நான்கு (16/11/2007) நாட்களுக்கு முன்னதாக மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
இதனை இறக்கிக் கொள்வதற்கான இணைப்பு
இதில் நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
ஃப்ரேம்வொர்க்கின் பல பதிப்புக்களுக்கு ஏற்ப திட்டங்களை உருவாக்க முடியும்.
உதாரணமாக, விசுவல் ஸ்டுடியோ 2008 ஐப் பயன்படுத்தி ஃப்ரேம்வொர்க் 2.0விற்கான திட்டங்களையும் உருவாக்கலாம் மற்ற 3.0, 3.5 ஆகியவற்றுக்கன திட்டங்களையும் உருவாக்கலாம்.
ஃப்ரேம் ஒர்க்கினுள் ஏஜாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது எனவே தனியாக அதை நிறுவவேண்டியதில்லை.
விசுவல் வெப்டெவலப்பர் 2008ல் மேம்படுத்தப்பட்ட எச்டிஎம்எல் மற்றும் சிஎஸ்எஸ் இணையவடிவமைப்பு மற்றும் ஏஎஸ்பி டாட்நெட் 3.5ல் ListView/DataPager ஆகிய புதிய தரவு கண்ட்ரோல்கள் போன்றவை அமைந்துள்ளன.
2008 வெளியீட்டில் வந்துள்ள கம்பைலர்களால் மொழியளவில் விபி மற்றும் சி# ஆகியவற்றில் முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டாட்நெட் 3.5 விலுள்ள சிறப்புக்கூறுகளாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது யாதெனில்,
- Language Integrated Query (LINQ)
- விண்டோஸ் கம்யூனிகேஷன் ஃபவுண்டேஷன் (WCF) சேவைகள் உருவாக்கத்திற்கான புதிய இணைய ப்ரோட்டோக்கால் ஆதரவு.
- விசுவல் ஸ்டுடியோ 2008 மூலம் ஒர்க் ஃப்ளோ (WF), விண்டோஸ் கம்யூனிகேஷன் ஃபவுண்டேஷன்(WCF), (விண்டோஸ் ப்ரசண்டேஷன் ஃபவுண்டேஷன்)WPF போன்றவற்றுக்கான நிரல்களை எழுதலாம்.
- புதிய கிளாஸ்கள் பேஸ் கிளாஸ் லைப்ரரியில் (BCL) சேர்க்கப்பட்டுள்ளன.
டாட்நெட் 3.5 -ஐ நிறுவ வேண்டுமெனில் குறைந்தது 96 மெகா பைட் ரேம் நினைவகம் தேவை, 256 மெகா பைட் ரேம் நினைவகம் மைக்ரோசாப்ட் பரிந்துரைத்துள்ளது. இயங்குதளத்தைப் பொறுத்தவரையில் விண்டோஸ் எக்ஸ்ப்பீ, விஸ்டா, விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவை ஆதரிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் டாட்நெட்டுக்கான ஒருங்கிணைந்த உருவாக்க சூழலான IDE "விசுவல் ஸ்டுடியோ 2008 எக்ஸ்பிரஸ் எடிஷனின்" இறுதி வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நிறுவுவதற்குத் தேவையான கோப்புக்களை டிவிடிக்கான ஐஎஸ்ஓ கோப்பாக மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. இதற்கான இணைப்பு.
இது விசுவல் பேசிக் 2008, விசுவல் வெப் டெவலப்பர் 2008, விசுவல் சி ஷார்ப் 2008, விசுவல் சி++ 2008, சீகுவல் சர்வர் 2005 (SQL Server 2005)ஆகியவற்றின் எக்ஸ்பிரஸ் எடிஷன் ஆகியன அடங்கிய ஒரு டிவிடி ஐஎஸ்ஓ ஆகும். இதன் அளவு 0.87 கிகா பைட் ஆகும்.
இதனை நேரடியாக இணையம் வழி நிறுவுதலும் செய்யலாம்.
இந்த 2008 எக்ஸ்பிரஸ் எடிஷனுக்கான 'எம்எஸ்டிஎன் எக்ஸ்பிரஸ்' -நிறுவத்தேவையான கோப்பைப் பெறுவதற்கான இணைப்பு
இக்கோப்பு 297 மெகா பைட் அளவிலுள்ளது.
----------------
Now playing: A.R. Rahman & Sayanora - Athiradee
via FoxyTunes
Labels: டாட்நெட்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment
<< முகப்பு